விளையாட்டு

உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றும்: சோயிப் அக்தர்

உலகக் கோப்பையை இந்திய அணி கைப்பற்றும்: சோயிப் அக்தர்

webteam

உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக் கோப்பை தொடரில், லீக் சுற்று போட்டிகள் முடிந்து அரையிறுதி போட்டிகள் நடக்க இருக்கின்றன. அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகள் முன்னேறியுள்ளன. நாளை நடக்கும் முதல் அரையிறுதி போட்டியில் இந்தியா அணி நியூசிலாந்தை எதிர்கொள்கிறது. அடுத்த அரையிறுதியில் ஆஸ்திரேலியா- இங்கிலாந்து அணிகள் மோதுகின்றன.

இந்நிலையில் உலகக் கோப்பையை இந்திய அணி வெல்லும் என்று நம்பிக்கைத் தெரிவித்துள்ளார், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர்.

அவர் கூறும்போது, ’’ நியூசிலாந்து அணியால், அரையிறுதியில் இருக்கும் அழுத்தத்தைத் தாங்கிகொள்ள முடியாது. அதனால் அவர்கள் அடுத்தக் கட்டத்துக்கு வரமாட்டார்கள் என நம்புகிறேன். ஆனால், என் ஆசை, துணை கண்டத்தில் உள்ள நாடுகளில் உலகக் கோப்பை இருக்க வேண்டும் என்பது. இதனால் இந்தியாவுக்கு என் ஆதரவு உண்டு. உலகக் கோப்பையை இந்தியா வென்றால் மகிழ்ச்சி. அவர்கள் கோப்பையை கொண்டு வருவார்கள் என்று நம்புகிறேன். ரோகித் சர்மா சிறப்பாக ஆடிவரு கிறார். ஆட்டத்தைப் புரிந்துகொண்டு ஆடுகிறார். அவரது ஷாட் தேர்வு சிறப்பாக இருக்கிறது. அவருக்கு துணையாக கே.எல்.ராகுலும் நன்றாக விளையாடுகிறார். 

இந்த தொடரில், நியூசிலாந்து, பாகிஸ்தான் அணிகளின் வெற்றிகள் ஒரே மாதிரி இருந்தன. நியூசிலாந்தை விட சிறப்பாக ஆடி யும், நிகர ரன் ரேட் அடிப்படையில் பாகிஸ்தானால் அரையிறுதிக்கு செல்ல முடியவில்லை. நிகர ரன் ரேட் என்பது மோசமான விஷயம்’’ என்றார்.