பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்துவீச்சாளர் சோயிப் அக்தர். ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்படும் இவர்,அடிக்கடி சர்ச்சையிலும் சிக்குவார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்துடன் மோதலில் ஏற்பட்ட அக்தர், வாரியத்தை கடுமையாக விமர்சித்தும் வந்துள்ளார்.
2013-ம் ஆண்டு, நஜம் சேதியின் தலைமையில் பாகிஸ்தான் கிரிக்கெட் மோசமாகிவிட்டது என்றும் ’தான் டிவி தொகுப்பாளர் அல்ல, கிரிக்கெட் வாரிய சேர்மன் என்பதை அவர் உணரவேண்டும்’ என்று கூறியிருந்தார். இது அப்போது பலத்த சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் 42 வயதான அக்தர், அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்தின் தூதராகவும் கிரிக்கெட் வாரிய சேர்மன் நஜம் சேதிக்கு ஆலோசகராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை அக்தர் தெரிவித்துள்ளார்.