விளையாட்டு

விமானப் படை வீரர்களுடன் சந்திப்பு நடத்திய கிரிக்கெட் வீரர்கள்..!

விமானப் படை வீரர்களுடன் சந்திப்பு நடத்திய கிரிக்கெட் வீரர்கள்..!

webteam

இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் சிலர் இந்திய விமானப்படை வீரர்களுடன் சிறிய சந்திப்பு ஒன்றை நடத்தினர்.

இந்திய கிரிக்கெட் அணி தற்போது பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்று வருகிறது. இந்தத் தொடரில் முதல் இரண்டு போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றிப் பெற்றுள்ளன. இந்தச் சூழலில் தொடரை தீர்மானிக்கும் மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி நாக்பூரில் நாளை நடைபெற உள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் நாக்பூரில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் இந்திய அணியின் ஷிகர் தவான், ரிஷாப் பன்ட் உள்ளிட்ட சில வீரர்கள் இந்திய விமானப்படை வீரர்களுடன் சந்திப்பு நடத்தினர். இவர்கள் விமானப் படையின் சூர்ய கிரண் குழுவினரை சந்தித்தனர். அவர்களுடன் சிறிது நேரம் உரையாடிய வீரர்கள் பின்னர் அவர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டனர். இந்தச் சந்திப்பின் போது இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் உடன் இருந்தார். இந்தச் சந்திப்பு தொடர்பாக பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.