இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவானை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து வருகின்றனர்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. அங்கு ஹாமில்டனில் நடந்த நான்காவது ஒரு நாள் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக்கிற்கு பந்து தலையில் பட்டு காயமேற்பட்டது. இந்நிலையில் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஷிகர் தவான், அவரது நலம் விசாரித்து ட்விட்டரில் பதிவிட்டார். ’விரைவில் குணமாகி, களத்தில் இறங்குவீர்கள் என நம்புகிறேன்’ என்று கூறியிருந்தார்.
அவரது இந்த நலம் விசாரிப்புக்கு சமூக வலைத்தளங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. ’இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் நட்பாக இருப்பது வரவேற்கத்தக்கது’ என பாகிஸ்தான் ரசிகர்கள் அவரை பாராட்டி தள்ளியுள்ளனர்.