ஆஸ்திரேலியாவை சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ஷான் டைட்டுக்கு வெளிநாடு வாழ் இந்தியர் அந்தஸ்து அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2014-ஆம் ஆண்டு இந்தியாவை சேர்ந்த மாடல் அழகியான மஷூம் சின்ஹா-வை ஷான் டைட் திருமணம் செய்தார். இதனையடுத்து வெளிநாடு வாழ் இந்தியராக, தமக்கு அங்கீகாரம் வழங்க வேண்டும் என அவர் விண்ணபித்திருந்தார். இந்த நிலையில் வெளிநாடு இந்தியருக்கான அடையான அட்டை அவருக்கு தற்போது வழங்கப்பட்டுள்ளது. இதை தமது டுவிட்டர் இணையதளத்தில் ஷான் டைட் பதிவிட்டுள்ளார்.