விளையாட்டு

’பிக்பாஷ்’-ல் இருந்து ஓய்வு பெற்றார் ஷேன் வாட்சன்

’பிக்பாஷ்’-ல் இருந்து ஓய்வு பெற்றார் ஷேன் வாட்சன்

webteam

ஆஸ்திரேலியாவின் பிக்பாஷ் தொடரில் இருந்து ஓய்வுபெறுவதாக ஷேன் வாட்சன் அறிவித்துள்ளார். இதன்மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாழ்க்கைக்கு அவர் பிரியா விடை கொடுத்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டராக இருந்தவர் ஷேன் வாட்சன். அதிரடி வீரரான இவர், கடந்த 2016 ஆம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். இதையடுத்து ஆஸ்திரேலியாவில், ஐபிஎல் போல நடக்கும் பிக் பாஷ் டி20 தொடரில்  பங்கேற்று வந்தார். ’ சிட்னி தண்டர்’ அணிக்கு 4 ஆண்டுக்கு முன்பாக கேப்டன் பொறுப்பு ஏற்ற அவர், அதிரடியாக விளையாடி வந்தார். தற்போது இந்த போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட விரும்புவதால் இந்த ஓய்வு முடிவை அவர் அறிவித்துள்ளார்.

இதன் மூலம் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாழ்க்கைக்கு பிரியா விடை கொடுத்துள்ளார். தண்டர் அணியில் தன்னுடன் ஆடிய வீரர்களுக்கும் நிர்வாகத்துக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

பிக்பாஷ் தொடரில் ஆட வில்லை என்றாலும் வெளிநாடுகளில் நடக்கும் டி20 லீக் போட்டிகளில் அவர் பங்கேற்பார். தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக அவர் ஆடி வருகிறார்.