உலகக்கோப்பை 2026 கீதமாக வெளியான “Dai Dai” பாடலை ஷகிரா மற்றும் ஆப்பிரிக்க சூப்பர் ஸ்டார் பர்னா பாய் இணைந்து பாடியுள்ளனர்.
உன்னை ஒருமுறை உடைத்தது எதுவோ, அதுவே உன்னை வலிமையாக்கும் என்ற வரிகளோடு உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான கீதம் வெளியாகியுள்ளது. 'வக்கா வக்கா' பாடல் நாயகி ஷகிரா மற்றும் ஆப்பிரிக்க சூப்பர் ஸ்டார் பர்னா பாய் இணைந்து பாடியுள்ள "Dai Dai" பாடல் தற்போது வெளியாகியுள்ளது.
ஆப்பிரிக்காவின் அஃப்ரோபீட்ஸ் (Afrobeats) மற்றும் லத்தீன் இசையின் கலவையாக இந்தப்பாடல் தெறிக்க விடுகிறது. வரும் ஜூலை 19இல் மெட்லைஃப் ஸ்டேடியத்தில் நடைபெறும் இறுதிப்போட்டியில் ஒரு பிரமாண்ட இசை நிகழ்ச்சி நடக்கவுள்ளது. இதில் ஷகிரா, பாப் ராணி மடோனா மற்றும் உலகப்புகழ் பெற்ற BTS குழுவினர் இணைந்து மேடையை அதிரவிடப் போகிறார்கள்.
ஷகிரா அதிகாரபூர்வமாக உலகக்கோப்பை கீதத்தைப் பாடுவது இது மூன்றாவது முறையாக அமைந்துள்ளது. மெக்சிகோவின் அஸ்டெகா மைதானத்தில் ஜூன் 11இல் தொடங்கும் இந்த 48 அணிகள் மோதும் பிரமாண்ட திருவிழாவிற்கு, "Dai Dai" பாடல் இப்போதே ஹைப் ஏற்றியுள்ளது.