விளையாட்டு

ஷாகிப் அல் ஹசன் கிரிக்கெட் விளையாட 2020 அக்டோபர் வரை தடை !

webteam

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் டி20 கேப்டன் ஷாகிப் அல் ஹசன் கிரிக்கெட் விளையாட ஒராண்டு தடை விதித்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. 

பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளுக்கான கேப்டனாக ஷகிப் அல் ஹசன் செயல்பட்டு வருகிறார். கடந்த 2018ஆம் ஆண்டு பங்களாதேஷ், இலங்கை மற்றும் ஜிம்பாவே இடையே நடைபெற்ற முத்தரப்பு தொடரில் ஷாகிப்பை மேட்ச் ஃபிக்சிங் செய்ய இடைத் தரகர்கள் அனுகியுள்ளனர். அதேபோல 2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் போதும் இவரை மேட்ச் ஃபிக்சிங் செய்ய இடைத் தரகர்கள் அனுகியுள்ளனர். 

இந்த இரண்டு முறையும் இடைத் தரகர்கள் தன்னை அனுகியது தொடர்பாக ஷாகிப் அல் ஹசன் ஐசிசிக்கு தெரிவிக்கவில்லை. எனவே ஐசிசியின் ஊழல் தடுப்பு நெறிமுறைகளை ஷாகிப் அல் ஹசன் கிரிக்கெட் விளையாட இரண்டு ஆண்டுகள் தடை விதிப்பதாக ஐசிசி தெரிவித்தது.

எனினும் ஷாகிப் அல் ஹசன் தனது தவறை ஒப்புக் கொண்டதால் அவரின் தடைக் காலத்தை ஒராண்டாக குறைத்து ஐசிசி உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஷாகிப் அல் ஹசன் வரும் 2020ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி முதல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடலாம். ஆகவே ஷாகிப் அல் ஹசன் கிரிக்கெட் விளையாட ஒராண்டு தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.