விளையாட்டு

குழந்தையுடன் செரினா... வைரலாகும் வீடியோ

குழந்தையுடன் செரினா... வைரலாகும் வீடியோ

webteam

அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை செரினா வில்லியம்ஸ், முதல் முறையாக தனது குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

குழந்தையின் பெயர் மற்றும் பிறந்த தேதி உள்ளிட்ட விவரங்களையும் இணையதளத்தில் செரினா வில்லியம்ஸ் வெளியிட்டுள்ளார். கடந்த ஒன்றாம் தேதி பிறந்த தமது பெண்‌ குழந்தைக்கு ‌அலெக்சிஸ் ஒலிம்பியா எனப் பெயரிட்டுள்ளதாக செரினா தெரிவித்துள்ளார். தாம் கருவுற்றது முதல் குழந்தை பிறந்தது வரையிலான நிகழ்வுகளின் தொகுப்பை, வீடியோவாகவும் செரினா வில்லியம்ஸ் வெளியிட்டுள்ளார். செரினா வில்லியம்ஸின் குழந்தையின் புகைப்படத்தை கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.