விளையாட்டு

சகோதரியை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபனை வென்ற செரினா வில்லியம்ஸ்

சகோதரியை வீழ்த்தி ஆஸ்திரேலிய ஓபனை வென்ற செரினா வில்லியம்ஸ்

webteam

கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபனில் சகோதரி வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி செரினா வில்லியம்ஸ் பெண்கள் ஒற்றையர் பிரிவில் பட்டம் வென்றார்.

மெல்போர்னில் நடந்த இறுதிப் போட்டியின் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய செரீனா 6-4, 6-4 என்ற நேர் செட்களில் வீனஸ் வில்லியம்ஸை வீழ்த்தி வெற்றி பெற்றார். இதன்மூலம் 23ஆவது பட்டத்தை வென்ற செரினா, கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் அதிக பட்டங்களை வென்ற வீராங்கனைகளுக்கான பட்டியலில் மார்க்ரெட் கோர்ட்டுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தினை பிடித்தார். சர்வதேச டென்னிஸில் மார்க்ரெட் கோர்ட் 24 பட்டங்களை வென்றுள்ளார். ஆஸ்திரேலிய ஓபனில் செரினா வில்லியம்ஸ் பெறும் 7ஆவது பட்டம் இதுவாகும்.