விளையாட்டு

மிகப்பெரிய சாதனையை எதிர்நோக்கி செரீனா வில்லியம்ஸ் ..!

rajakannan

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டிக்கு நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் முன்னேறி இருக்கிறார். 

இறுதிப் போட்டியில் இளம் வீராங்கனை பினாகாவை சந்திக்கிறார் செரீனா. ஒவ்வொரு போட்டிகளின் முடிவிலும் ஒரு சாதனையை முறியடிப்பதை வழக்கமாக கொண்டுள்ள செரினா வில்லியம்ஸ், டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர்களில் ஒருவர் என்ற பெருஞ்சாதனையை எதிர்நோக்கி இருக்கிறார். நடப்பு அமெரிக்க ஒபன் பட்டத்தை அவர் வசமாக்கும் பட்சத்தில் அதிக கிராண்ட்ஸ்லாம்களை வென்ற ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜாம்பவான் வீராங்கனை MARGARET COURT-ன் சாதனையை சமன் செய்வார். 37 வயதான செரீனா வில்லியம்ஸ், இதுவரை 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று சாதித்து இருக்கிறார். 

அமெரிக்க ஓபன் அரையிறுதியில் ஐந்தாம் நிலை வீராங்கனையான உக்ரைனின் SVITOLINA ஐ ‌செரினா சந்தித்தார். அந்தப் போட்டியில் 6-3, 6-1 என்ற நேர் செட் கணக்கில் உக்ரைன் வீராங்கனையை பந்தாடி இறுதிக்கு முன்னேறி இருக்கிறார். அவர் அமெரிக்க ஓபன் வரலாற்றில் இறுதிப் போட்டிக்கு முன்னேறுவது இது 10 ஆவது முறையாகும். இறுதிப் போட்டியில், செரீனா 20 வயதான இளம் வீராங்கனையும் தரநிலையில் 15ஆம் இடத்தில் உள்ள கனடாவின் BIANCA ANDREESCU ஐ எதிர்கொள்கிறார். 

செரீனா வில்லியம்ஸ், அமெரிக்க ஒபன் பட்டத்தை வென்று டென்னிஸ் வரலாற்றில் அதிக கிராண்ட்லாம்களை வென்றவரின் சாதனையை சமன் செய்வாரா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.