விளையாட்டு

அமெரிக்க ஓபன் டென்னிஸ்: இரட்டையர் பிரிவில் வில்லியம்ஸ் சகோதரிகள் அதிர்ச்சி தோல்வி!

webteam

அமெரிக்க ஓபன் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் செரீனா மற்றும் வீனஸ் வில்லியம்ஸ் ஜோடி தோல்வியடைந்தது. இவர்களை எதிர்த்து விளையாடிய லூசி ஹ்ரடேக்கா மற்றும் லிண்டா நோஸ்கோவா ஜோடி 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றது.

வில்லியம்ஸ் சகோதரிகளை எதிர்த்து தாங்கள் வெற்றி பெற்றதை நினைத்து இன்னும் அதிர்ச்சியில் இருப்பதாக ஹ்ரடேக்கா தெரிவித்துள்ளார். மேலும் வில்லியம்ஸ் சகோதரிகளுக்கு எதிராக விளையாடுவது அனைவருக்கும் ஒரு சிறப்பான தருணம் என  நோஸ்கோவா கூறினார்.  40 வயதான செரீனா வில்லியம்ஸ் இந்த தொடருடன் டென்னிஸ் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஏற்கனவே அறிவித்துள்ளார்.

ஒற்றையர் பிரிவில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று மகத்தான சாதனை படைத்துள்ள செரீனா, இந்த தொடரின் இரட்டையர் பிரிவில் சகோதரி வீனஸ் வில்லியம்சுடன் இணைந்து களமிறங்க ‘வைல்டு கார்டு’சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: அடிச்சு ஆடிய சூர்யகுமார் யாதவ்! சூப்பர் 4 க்கு தகுதி பெற்றது இந்திய அணி