விளையாட்டு

சச்சினின் இந்த ரெக்கார்டை முறியடிக்கவே முடியாது: சேவாக் திட்டவட்டம்!

சச்சினின் இந்த ரெக்கார்டை முறியடிக்கவே முடியாது: சேவாக் திட்டவட்டம்!

webteam

சச்சின் டெண்டுல்கரின் பல்வேறு சாதனைகளை முறியத்துவரும் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோலி, அவரது ஒரே ஒரு சாதனையை மட்டும் முறியடிக்க முடியாது என்று வீரேந்திர சேவாக் கூறியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராத் கோலி, பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். அவர் சச்சின் டெண் டுல்கரின் பல சாதனைகளை முறியடித்தும் வருகிறார். இந்நிலையில் சச்சினின் ஒரே ஒரு சாதனையை மட்டும் விராத் கோலி உட்பட எந்த வீரராலும் முறியடிக்க முடியாது என்று இந்திய அணியின், முன்னாள் அதிரடி ஆட்டக்காரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார். 

அவர் கூறும்போது, ‘’விராத் கோலி இப்போது சிறந்த பேட்ஸ்மேனாக இருக்கிறார். அவர் தொடர்ந்து சதமடித்து வருவது, அதிக ரன்கள் குவித்து வருவது மகிழ்ச்சியாக இருக்கிறது. சச்சின் டெண்டுல்கரின் பல சாதனைகளை அவர் தகர்ப்பார். ஆனால், ஒரே ஒரு சாதனையை மட்டும் அவரால் தகர்க்க முடியாது. அவர் மட்டுமல்ல, மற்ற  வீரராலும் தகர்க்க முடியாது என நினைக்கிறேன். சச்சின் 200 டெஸ்ட் போட்டிகளில் ஆடியிருக்கிறார். இத்தனை டெஸ்ட் போட்டிகளில் ஆடிய ஒரே வீரர் அவர்தான். இதை யாராலும் முறியடிக்க முடியும் என நினைக்கவில்லை’’ என்று தெரிவித்துள்ளார் சேவாக்.