தெய்வங்களை பிரசாதம் கொடுத்து சமாளித்துவிடலாம். ஆனால், மனைவியை அப்படி சமாளிக்க முடியாதே’ என வீரேந்திர சேவாக் தனது டிவிட்டரில் நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.
சமூக வலைதளங்களில் பல்வேறு பிரபலங்கள் ஆக்டிவாக
இருந்து வருகின்றனர். அந்த வகையில், கிரிக்கெட் வீரர்
வீரேந்திர சேவாக் நாட்டில் நிலவும் சமூக பிரச்சனைகள்
குறித்தும், வீரர்களை பாராட்டியும், சில நேரங்களில்
நகைச்சுவையாகவும் அவ்வப்போது கருத்துக்கள்
தெரிவிப்பதுண்டு.
சில தினங்களுக்கு முன்பு சச்சின் டெண்டுல்கரின்
வாழ்க்கை வரலாறு குறித்த 'சச்சின் ஏ பில்லியன் ட்ரீம்ஸ்'
என்ற திரைப்படம் நாடு முழுவதும் வெளியானது. இந்தப்
படத்தின் சிறப்புக் காட்சி கிரிக்கெட் வீரர்களுக்காகத்
திரையிடப்பட்டது. இதில், பல்வேறு கிரிக்கெட்
நட்சத்திரங்கள் தங்களது குடும்பத்தினருடன் கலந்து
கொண்ட நிலையில், வீரேந்திர சேவாக் மட்டும் படம்
பார்க்க வரவில்லை. இதுகுறித்து சேவாக் தனது
டிவிட்டரில் விளக்கம் அளித்துள்ளார்.
’கடவுள் சச்சின் படம் பார்க்க அழைத்தார். ஆனால்,
மனைவியோ விடுமுறைக்கு அழைத்துச் சென்றுவிட்டார்.
தெய்வங்களை பிரசாதம் கொடுத்து சமாளித்துவிடலாம்.
ஆனால், மனைவியை அப்படி சமாளிக்க முடியாதே’ என
நகைச்சுவையாக குறிப்பிட்டுள்ளார்.
மற்றொரு டிவிட்டில், பாராலிம்பிக் போட்டியில்
இந்தியாவிற்கு தங்கப்பதக்கத்தை வென்று தந்த
மாரியப்பன் தங்கவேலுவை பாராட்டியுள்ளார் ஷேவாக்.