விளையாட்டு

பிசிசிஐ கூட்டத்தில் பங்கேற்றது ஏன்?: சீனிவாசன், நிரஞ்சன் ஷாவுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

webteam

தகுதி நீக்கம் செய்யப்பட்ட பிறகு கிரிக்கெட் வாரிய சிறப்பு பொதுக்குழுவில் பங்கேற்றது தொடர்பாக விளக்கம் கேட்டு பிசிசிஐ முன்னாள் தலைவர் என். சீனிவாசன், நிரஞ்சன் ஷா ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து பதில் அளிக்க வரும் 24ஆம் தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. லோதா குழுவின் பரிந்துரைகளைத் தொடர்ந்து, 70 வயதைத் கடந்த என்.சீனிவாசனும், சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்கத்தைச் சேர்ந்த நிரஞ்சன் ஷா-வும் தகுதி நீக்கம் செய்யப்பட்டனர். எனினும் கடந்த மாதம் நடந்த கிரிக்கெட் வாரிய சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் இவர்கள் இருவரும், மாநில கிரிக்கெட் சங்க பிரதிநிதிகள் என்ற பெயரில் கலந்துகொண்டனர். இந்த நிலையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டவர்கள், கிரிக்கெட் வாரிய கூட்டத்தில் எப்படி பங்கேற்றனர் என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இதனிடையே நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இருந்து, பிசிசிஐ முன்னாள் தலைவர் அனுராக் தாக்கூர் விடுவிக்கப்பட்டுள்ளார். அனுராக் தாக்கூர் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியதால், வழக்கை நீதிமன்றம் கைவிட்டது.