விளையாட்டு

'ராஜஸ்தான் அணியை நினைத்து பெருமைப்படுகிறேன்' - சஞ்சு சாம்சன் உருக்கம்

'ராஜஸ்தான் அணியை நினைத்து பெருமைப்படுகிறேன்' - சஞ்சு சாம்சன் உருக்கம்

JustinDurai


''இந்த நாள் எங்களுக்கு சரியாக அமையவில்லை. எனினும் என் அணியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன்'' எனக் கூறியுள்ளார் ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன்.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது குஜராத் டைட்டான்ஸ் அணி . 14 ஆண்டுகளுக்கு பிறகு இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற ராஜஸ்தான் அணி கோப்பையைத் தவறவிட்டிருக்கிறது. அறிமுகமான முதல் சீசனிலே குஜராத் அணி ஐபிஎல் சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

இந்நிலையில், இறுதிப் போட்டி முடிந்ததும் தோல்வி குறித்து பேசிய ராஜஸ்தான் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன், ''இந்த சீசன் எங்களுக்கு உண்மையாகவே ஸ்பெஷலான சீசனாக இருந்தது. கடந்த இரண்டு மூன்று சீசன்களில் எங்கள் அணி ரசிகர்கள் மற்றும் அனைவரும் கடினமான நேரங்களை சந்தித்தோம். ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான தருணங்களை கொடுப்பது சிறந்தது. எங்கள் அணியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன், திறமையான இளம் வீரர்கள், திறமையான சீனியர் வீரர்கள் எங்களிடம் உள்ளனர். இந்த நாள் எங்களுக்கு சரியாக அமையவில்லை. எனினும் என் அணியை நினைத்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். நாங்கள் மெகா ஏலத்தில் காலத்தில் தரமான பந்துவீச்சாளர்களை எடுக்க விரும்பினோம். ஏனெனில் அவர்கள்தான் போட்டியை வென்று கொடுக்கக் கூடியவர்களாக இருப்பார்கள்.

குஜராத் அணிக்கு என்னுடைய மிகப்பெரிய வாழ்த்துக்கள். அவர்கள் சாம்பியன் பட்டத்தை வெல்ல தகுதியானவர்கள்'' என கூறினார்.

இதையும் படிக்கலாம்: பேட்டிங்கிலும் அசத்திய ஹர்திக் பாண்டியா! முதன்முறையாக மகுடம் சூடியது குஜராத்!