விளையாட்டு

பாகிஸ்தானில் சானியா மிர்சா: லாகூரில் ஸ்பெஷல் சந்திப்பு

பாகிஸ்தானில் சானியா மிர்சா: லாகூரில் ஸ்பெஷல் சந்திப்பு

webteam

பாகிஸ்தான் சென்றுள்ள டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா தனது கணவர் சோயிப் மாலிக்குடன் கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்ட பிரபலங்களை சந்தித்தார்.

இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா. இவர் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயிப் மாலிக்கை திருமணம் செய்திருக்கிறார். மூட்டுக் காயம் காரணமாக ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பங்கேற்காமல் இருந்த சானியா, கணவரைப் பார்ப்பதற்காக, பாகிஸ்தான் சென்றார். லாகூரில் உள்ள கணவர் வீட்டுக்குச் சென்ற அவர், அங்கு பொழுதைக் கழித்தார். மாமியார் மற்றும் உறவினர்களுடன் விருந்தில் கலந்துகொண்டார்.

பின்னர், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் முமகது ஹபீஸ் வீட்டுக்குச் சென்றார். அவர் மனைவி மற்றும் குழந்தைகளுடன் நேரத்தைச் செலவிட்ட அவர், பிறகு அங்குள்ள சில பிரபலங்களின் வீடுகளுக்கும் சென்றார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.