ஷார்ஜாவில் நடைபெற்று வரும் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை 30 ரன்களுக்கு ஆறு விக்கெட்டை இழந்து தடுமாறியது.
ஐபிஎல் வரலாற்றில் மோசமான சாதனையான குறைந்தபட்ச ஸ்கோரை சென்னை பதிவு செய்து விடுமோ என எதிர்பார்த்த நிலையில் தனி ஒருவராக நின்று சென்னையின் மானத்தை காத்தார் சாம் கர்ரன்.
கெய்க்வாட், டுப்லெஸி, ராயுடு, ஜெகதீசன், ஜடேஜா, தோனி என சென்னையின் பேட்ஸ்மேன்கள் வந்த வேகத்தில் பெவிலியன் திரும்ப 47 பந்துகளுக்கு 52 ரன்களை அடித்து சென்னை 114 ரன்கள் எட்ட உதவினார்.