விளையாட்டு

பயிற்சியின்போது பென் ஸ்டோக்ஸ் காயம்: சாம் குர்ரன் சேர்ப்பு

பயிற்சியின்போது பென் ஸ்டோக்ஸ் காயம்: சாம் குர்ரன் சேர்ப்பு

webteam

பயிற்சியின்போது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் பென் ஸ்டோக்ஸ், காயமடைந்ததால் அவருக்கு பதில் சாம் குர்ரன் சேர்க்கப்பட்டுள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தான் அணி அபார வெற்றி பெற்றது. இரண்டாவது டெஸ்ட் போட்டி, நாளை நடைபெற உள்ளது. 

(சாம் குர்ரன்)

இந்த போட்டிக்காக இங்கிலாந்து வீரர்கள் நேற்று தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக பென் ஸ்டோக்ஸின் தொடையில் காயம் ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட அவர், இந்தப் போட்டியில் இருந்து விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக, சர்ரே அணி யின் ஆல்ரவுண்டர் சாம் குர்ரன் சேர்க்கப்பட்டுள்ளார்.