விளையாட்டு

மணம் முடித்தார் ஒலிம்பிக் வீராங்கனை சாக்ஷி மாலிக்

மணம் முடித்தார் ஒலிம்பிக் வீராங்கனை சாக்ஷி மாலிக்

Rasus

ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற குத்து சண்டை வீராங்கனையான சாக்ஷி மாலிக்கும் குத்து சண்டை வீரர் சத்தியவர்த்துக்கும் ஹரியானவில் இன்று திருமணமானது.

இந்த திருமண விழாவில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் சுஷில் குமார், முன்னாள் அரியானா முதல்வர் பூபிந்தர் சிங் ஹூடா ஆகியோர் பங்கேற்றனர். சாக்ஷி மாலிக்கும் சத்தியவர்த்துக்கும் கடந்த அக்டோபர் மாதம் நிச்சயதார்த்தம் ஆனது.

கடந்த 2016-ஆம் ஆண்டு ரியோ டி ஜெனீரோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில், 58 கிலோ பெண்கள் பிரிவில் போட்டியிட்ட குத்துச்சண்டை வீராங்கனை சாக்ஷி மாலிக் முதல் முறையாக இந்தியாவிற்கு வெண்கலத்தை பெற்று தந்தார். சத்தியவர்த் 2010-ம் ஆண்டு நடைபெற்ற இளைஞர் ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் மற்றும் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றவர்.