மகேந்திர சிங் தோனியை தன்னுடைய சேர்த்து வைத்த ராபின் உத்தப்பாவுக்கு சாக்ஷி தோனி நன்றி தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் சாக்ஷி தனது 30வது பிறந்தநாளைக் கொண்டாடினார். இந்த நிகழ்ச்சியில் ராபின் உத்தப்பா, ஹர்திக் பாண்ட்யா மற்றும் நண்பர்கள் பலர் கலந்து கொண்டனர். நடிகைகள் சோபி சவுத்ரி, பாடகர் ராகுல் வைத்யா உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். தன்னுடைய பிறந்தநாள் நிகழ்ச்சியை சிறப்பித்த அனைவருக்கும் சாக்ஷி நன்றி தெரிவித்துள்ளார். இதில் குறிப்பாக ராபின் உத்தப்பாவுக்கு சிறப்பான நன்றியை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சாக்ஷி, “தோனியை தன்னுடன் சேர்த்து வைத்த உத்தப்பாவுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.