விளையாட்டு

பாஜகவில் இணைகிறார் சாய்னா நேவால்

Rasus

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் இன்று பாஜகவில் இணைய உள்ளார்.

பிரபல பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால். இவர் இன்று பாரதிய ஜனதா கட்சியில் அதிகாரப்பூர்வமாக இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஹரியானாவில் பிறந்த சாய்னா நேவால் காமன்வெல்த், ஒலிம்பிக் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று இந்தியாவிற்காக பதக்கம் வென்றுள்ளார்.