சீன ஓபன் பேட்மிண்டனில் இந்திய வீராங்கனைகளான சாய்னாவும், சிந்துவும் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
சீன ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் தொடரின் பிரதான சுற்று போட்டிகள் புஸ்கோவ் நகரில் நடைபெற்று வருகின்றன. உலகத் தரவரிசையில் 11வது இடத்தில் உள்ள சாய்னா, முதல் சுற்றில் 12வது இடத்தில் உள்ள அமெரிக்காவின் பெய்வென் ஜாங்கை எதிர்கொண்டார். இந்தப்போட்டியில் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய சாய்னா 21-12, 21-13 என்ற நேர் செட்களில் பெய்வென் ஜாங்கை தோற்கடித்தார். மற்றொரு போட்டியில் தொடரின் இரண்டாம் நிலை வீராங்கனையான பி.வி.சிந்து, ஜப்பான் வீராங்கனை சயாக்கா சாட்டோவை எதிர்கொண்டார். இந்தப் போட்டியில் சிந்து 24-22, 23-21 என்ற நேர்செட்களில் போராடி வென்றார்.
மற்றொரு போடியில் இந்திய வீரர் பிரணாய் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறியுனார். ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் தென்கொரிய வீரர் லி டாங் கியுனை எதிர்த்து பிரணாய் விளையாடினார். மூன்று செட்கள் நீடித்த போட்டியில் 18-21, 21-16, 21-19 என்ற கணக்கில் பிரணாய் போராடி வென்றார். மற்றொரு முதல் ஆட்டத்தில் இந்திய வீரர் சவுரப் வர்மா, பிரான்ஸ் வீரர் பிரேய்ஸ் லெவர்டஸ்ஸிடம் மூன்று செட்களில் தோல்வியடைந்தார்.