சச்சின் குடும்பத்தில் சானியா சந்தோக் FB
விளையாட்டு

சச்சின் குடும்பத்துடன் டூர்.. அஞ்சலியுடன் நிற்கும் சானியா சந்தோக்.. வைரலாகும் போட்டோஸ்..!

சச்சின் டெண்டூல்கரின் அனைத்து விதமான குடும்ப நிகழ்ச்சிகளிலும் சானியா சந்தோக்தொடர்ந்து இடம்பெற்று வருவது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..

Vaijayanthi S

சச்சின் டெண்டூல்கரின் அனைத்து விதமான குடும்ப நிகழ்ச்சிகளிலும் சானியா சந்தோக்தொடர்ந்து இடம்பெற்று வருவது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது..

சானியா சந்தோக் என்பவர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மருமகள்.. ஆம் சச்சின் மகன் அர்ஜுன் டெண்டுல்கரின் மனைவியாக நிச்சயதார்த்தம் செய்யப்பட்ட பெண்தான் இந்த சானியா சந்தோக். கடந்த ஆகஸ்ட் மாதம் 13ஆம் தேதி இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து டெண்டுல்கர் குடும்பத்தினர் இதுவரை எவ்வித அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

சச்சின் குடும்பத்தில் சானியா சந்தோக்

அர்ஜுன் டெண்டுல்கரின் வருங்கால மனைவி சானியா சந்தோக் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் ரவி காய்-ன் பேத்தி. இவர் கால்நடை தொழில்நுட்ப வல்லுநராக சான்றிதழ் பெற்றுள்ளார். மேலும், செல்லப் பிராணிகளுக்கான தோல் பராமரிப்பு பிராண்டான 'Mr. Paws' இன் நிறுவனரும் இவர்தான்..

இந்நிலையில் சச்சின் டெண்டுல்கரின் அனைத்து விதமான குடும்ப நிகழ்ச்சிகள் மற்றும் டூர்களில் தொடர்ந்து சானிய சந்தோக் இடம் பெற்று வருகிறார்.. கடந்த ஆகஸ்ட் 30ஆம் தேதி சச்சின் தனது தாயின் பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடியதாக இன்ஸ்டாவில் புகைப்படத்துடன் பதிவிட்டிருந்தார்..

சச்சின் குடும்பத்தில் சானியா சந்தோக்

அந்த படங்களில் மருமகளான சானியாவும் டெண்டுல்கர் குடும்பத்தினருடன் பிறந்த நாளை கொண்டாடுவது போல இருந்தது குறிப்பிடத்தக்கது.. அதுபோல சச்சின் தனது குடும்பத்தினருடன் சமீபத்தில் நர்மதா நதிக்கரையில் அமைதியான சூழலில் அமைந்துள்ள மகேஷ்வர் கோட்டைக்கு சுற்றுலா சென்றுள்ளார்.

அப்போது சச்சின் டெண்டுல்கர் மனைவி அஞ்சலி, மகள் சாரா மற்றும் மாமியார் அன்னாபெல் ஆகியோருடன் போட்டோ எடுத்துள்ளார். ஆனால் அதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது சானியா சந்தோக்தான்.. ஆம் அவரும் அந்த படத்தில் இடம்பெற்றிருந்தார்.. அதுமட்டுமல்லாமல் சமீபத்தில், மும்பையில் நடந்த தனது தோழி சாரா டெண்டுல்கரின் பைலேட்ஸ் ஸ்டுடியோ வெளியீட்டு விழாவில் சானியா கலந்துக் கொண்டார்.

சச்சின் குடும்பத்தில் சானியா சந்தோக்

இப்படி சச்சின் டெண்டூல்கரின் அனைத்து விதமான குடும்ப நிகழ்ச்சிகளிலும் அவர் தொடர்ந்து இடம்பெற்று வருவது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது..