விளையாட்டு

ஹாலுக்கு வந்த வால் ! சச்சினின் ரைமிங் ட்வீட்

ஹாலுக்கு வந்த வால் ! சச்சினின் ரைமிங் ட்வீட்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், 19 வயதுக்கு உட்பட்டோருக்கான இந்திய அணியின் பயிற்சியாளருமான ராகுல் டிராவிட்டுக்கு ஐ.சி.சி. "ஹால் ஆஃப் பேம்" கவுரவம் வழங்கியது.

கிரிக்கெட்டில் சிறந்து விளங்கும் வீரர்களை "ஹால் ஆஃப் பேம்" மூலம் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கவுரவித்து வருகிறது. டிராவிட் 1996 ஆண்டிலிருந்து இந்திய அணிக்கு இவர் ஆற்றிய பங்கு ஏராளம். இதுவரை 164 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் 13,288 ரன்கள் குவித்துள்ளார். மேலும் 344 ஒருநாள் போட்டிகளில் ஆடி 10,889 ரன்களை எட்டியுள்ளார். 

"ஹால் ஆஃப் பேம்" விருது கிடைக்கப்பெற்ற  ஐந்தாவது இந்திய கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட்.

இப்போது இந்திய கிரிக்கெட்டின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார், அதில் "வாழத்துகள் ராகுல் டிராவிட். ஒரு வழியாக வால் ஹால்லில் இணைந்தது. இதற்கு மிகவும் தகுதியானவர்" என தெரிவித்தார்.