விளையாட்டு

சென்னையில் சச்சின்: தமிழ் தலைவாஸ் அணிக்கு ஆதரவளிக்க கோரிக்கை!

சென்னையில் சச்சின்: தமிழ் தலைவாஸ் அணிக்கு ஆதரவளிக்க கோரிக்கை!

webteam

புரோ கபடி லீக் தொடரில் விளையாடும் தமிழ் தலைவாஸ் அணிக்கு, தமிழக ரசிகர்கள் ஆதரவு அளிக்குமாறு அணியின் உரிமையாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான சச்சின் டெண்டுல்கர் கேட்டுக்கொண்டுள்ளார்.

புரோ கபடி லீக் தொடரில் இன்று நடைபெறும் போட்டியைக் காண சென்னை வந்தபோது செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனை தெரிவித்தார். அப்போது பேசிய அவர், “சென்னையில் தமிழ் தலைவாஸ் அணி விளையாடும் முதல் கபடிப் போட்டியைக் காண ஆவலாக உள்ளேன். சென்னையில் கிரிக்கெட் விளையாடியபோது ரசிகர்கள் முழு ஆதரவு அளித்தனர். அதேபோன்ற ஆதரவு இப்போதும் இருக்கும் என நம்புகிறேன். ரசிகர்கள் தமிழ் தலைவாஸ் அணியின் போட்டியைக் கண்டு ரசித்து ஆதரவு அளிக்க வேண்டும்” என்று கூறினார். மேலும் பேசிய சச்சின், மும்பையும், சென்னையும் எனக்கு வேறுவேறாகத் தெரியவில்லை எனவும், இதுவும் எனது ஊரைப் போன்ற உணர்வையே ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.