கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன் தன்னை பிரமிக்க வைத்த பந்துவீச்சாளர்கள் குறித்து தெரிவித்திருக்கிறார்.
கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜூன். இவர் தற்போது கிரிக்கெட் வீரராக வலம் வந்துகொண்டிருக்கிறார். எதிர்காலத்தில் இந்திய அணியில் இடம்பெறுவேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இவர் சச்சினுக்கு நேர் எதிர். அர்ஜுன் இடக்கை வேகப்பந்து வீச்சாளர், இடக்கை துடுப்பாட்டக்காரர். இவர் சமீபத்தில் தன்னை பிரமிக்க வைத்த பந்துவீச்சாளர்கள் குறித்து தெரிவித்திருக்கிறார்.
தனது சிறு வயதில் ஃபுட்பால், நீச்சல், டேக்வாண்டோ போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகளில் கவனம் செலுத்தி வந்ததாகவும் ஆனால் அவற்றை எல்லாம் கிரிக்கெட் முந்திக் கொண்டுவிட்டதாகவும் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
மேலும் கிரிக்கெட் மீதான ஆர்வத்தை வளர்ப்பதில் உங்கள் அப்பாவின் பங்கு என்ன? என்ற கேள்விக்கு “என் அப்பா எனக்கு மிகவும் உதவினார். ஆனால், அவர் என்னைக் கட்டாயப்படுத்தவில்லை.” என்று குறிப்பிட்டுள்ளார். நீங்கள் மிகவும் பிரமிக்கும் பந்துவீச்சாளர்கள் யார்? என கேள்வி கேட்டதற்கு ஜாகிர் கான், மிட்செல் ஜான்சன், மிட்செல் ஸ்டார்க் மற்றும் வாசிம் அக்ரம் போன்றவர்கள்தான் என்று அர்ஜூன் டெண்டுல்கர் கூறியிருக்கிறார்.