விளையாட்டு

வெற்றி முக்கியம் தான், நேர்மை அதைவிட முக்கியம்: சச்சின் சாடல்!

வெற்றி முக்கியம் தான், நேர்மை அதைவிட முக்கியம்: சச்சின் சாடல்!

webteam

கிரிக்கெட் போட்டியில் வெற்றி முக்கியம், ஆனால் நேர்மை அதை விட முக்கியம் என இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.

ட்விட்டரில் சச்சின் “கிரிக்கெட் என்பது ஜெண்டில்மேன்களின் விளையாட்டாகும். இது ஒரு தூய்மைத் தன்மையுடன் விளையாடும் போட்டி என நம்புகிறேன். எதிர்பாராத விதமாக ஏதோ நடந்திருந்தாலும், சரியான முறையில் தான் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வெற்றி முக்கியம் தான். ஆனால் வெற்றியை அடையும் வழி அதைவிட முக்கியம்” என்று தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோரை ஓராண்டுக்கு ஐ.பி.எல், உட்பட அனைத்து போட்டிகளிலும் பங்கேற்க தடை விதித்துள்ளது. அதேபோல் கேப்டன் பொறுப்பு வகிக்கவும் அவர்களுக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதிக்கபட்டுள்ளது. இந்நிலையில் இவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தொடர்பாக சச்சின் கருத்து தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.