தர்மசாலாவில் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அசத்தலான பந்து வீச்சை வெளிப்படுத்தி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார் சைனாமேன் குல்தீப் யாதவ்.
காயம் காரணமாக கேப்டன் கோலி விலகிய நிலையில், குல்தீப் யாதவுக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. இந்த வாய்ப்பை அருமையாக பயன்படுத்திக்கொண்ட குல்தீப், முதலில் ஆஸ்திரேலிய வீரர் வார்னரின் விக்கெட்டை வீழ்த்தினார். பிறகு ஹேண்ட்ஸ்கோம்ப், மேக்ஸ்வெல் ஆகியோரை தனது மேஜிக் பந்துகளால் க்ளீன் போல்ட் செய்தார். பின்னர் பேட் கம்மின்ஸும் இவரது பந்து வீச்சில் அவுட்டானார். தனது முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 23 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியுள்ளார் குல்தீப்.
குல்தீப் யாதவின் பந்து வீச்சு தன்னை கவர்ந்ததாகவும், இதை குல்தீப் தொடரும் பட்சத்தில் இந்த டெஸ்ட் போட்டி அவருடையது என கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் குல்தீபை ட்விட்டரில் புகழ்ந்துள்ளார். மேலும், கிரிகெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே, ரோகித் ஷர்மா உள்ளிட்ட பல வீரர்கள் இவரை புகழ்ந்தனர்.