SA20 League pt web
விளையாட்டு

SA20 LEAGUE - ஒற்றை கேட்சால் கோடிஸ்வரான பார்வையாளர்..!

SA20 LEAGUE நான்காவது சீசனில் டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் - மும்பை கேப் டவுன் மோதிய முதல் போட்டியில் ரியன் ரிக்கல்டன் சிக்ஸர்க்கு அடித்த பந்தை பார்வையாளர் ஒற்றை கையால் கேட்சை பிடித்து 1.07 கோடி பெற்று கோடிஸ்வராகியிருக்கிறார்.

ரா.ராஜா

SA20 LEAGUE முதலில் 2023 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதுவரை நடைபெற்ற மூன்று சீசனில் சன்ரைசஸ் ஈஸ்டர்ன் கேப் அணி தொடர்ந்து மூன்று முறை இறுதிப்போட்டிக்கு வந்து அதில் இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. மேலும் மூன்றாவது சீசனில் மும்பை கேப் டவுன் அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது. தற்போது நான்கவது சீசன் 25/26 டிசம்பர் 26 முதல் ஜனவரி 25 வரை நடைபெறுகிறது. இத்தொடரில் நடப்பு சாம்பியான மும்பை கேப் டவுன் , டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் ,பெர்டோரியா கேப்பிட்டல்ஸ் , ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் , சன்ரைசஸ் ஈஸ்டர்ன் கேப் மற்றும் பாரல் ராயல்ஸ் என மொத்தம் ஆறு அணிகள் கலந்துகொண்டு விளையாடி வருகின்றன.

SA20 LEAGUE-ல் ஒற்றை கையில் கேட்ச் பிடித்த நபருக்கு ஒரு கோடி..!

SA20 LEAGUE-ல் கிரிக்கெட்டை ஊக்கப்படுத்தும் நோக்கில் போட்டியின் போது சிக்ஸர்க்கு வரும் பந்தினை ஒற்றை கையால் கேட்சினை பிடிக்கும் பார்வையாளருக்கு பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த டிசம்பர் 26 -ல் நடைபெற்ற டர்பன் சூப்பர் ஜெயின்ஸ் அணி- மும்பை கேப் டவுன் எதிரான முதல்போட்டியில் 20 ஓவரில் முடிவில் 232/5 ரன்களை குவித்தது.

DSG vs MICT

பின்னர் 233 ரன்கள் என்ற இமாலய இலக்கை சேஸ் செய்ய தொடங்கிய மும்பை கேப் டவுன் அணியில் தொடக்க ஆட்டக்காரரான ரியன் ரிக்கல்டன் அதிரடியாக ஆடிக்கொண்டிருந்த போது மபாகா வீசிய 13வது ஓவரில் நான்காவது பந்தில் சிக்ஸர்க்கு அடித்த போது கேலரியில் அமர்ந்து இருந்த பார்வையாளர் அப்பந்தினை ஒற்றை கையினால் கேட்சை பிடித்து 2 மில்லியன் ராண்ட் [ இந்தியா ரூபாயில் 1.07 கோடி ] பரிசினை பெற்றுள்ளார். கடந்த சீசனில் அறிமுகப்படுத்தபட்ட BetwayCatch2Million பெயரில் போட்டியின் போது சிக்ஸர் செல்லும் பந்தினை ஒற்றை கையால் கேட்சை பிடிக்கும் பார்வையாளருக்கு பரிசுத்தொகை என்ற செய்தி ரசிகர்களை கவர்ந்துள்ளது.

இதேபோல் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் போன்ற தொடரில் கிரிக்கெட் வீரர் சிக்ஸர்க்கு அடிக்கும் பந்தினை கேட்சை பிடிக்கும் பார்வையாளருக்கு 1 லட்சம் பரிசுத்தொகை என்பது குறிப்பிடத்தக்கது.