விளையாட்டு

இந்தியாவுக்கு முதல் தோல்வி: தென்னாப்பிரிக்காவிடம் சரண்டர்!

இந்தியாவுக்கு முதல் தோல்வி: தென்னாப்பிரிக்காவிடம் சரண்டர்!

webteam

பெண்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த லீக் போட்டியில் இந்தியா -தென்னாப்பிரிக்கா அணிகள் மோதின. டாஸ் வென்ற இந்திய கேப்டன் மித்தாலி ராஜ் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
முதலில் பேட்டிங்கை தொடங்கிய தென்னாப்பிரிக்க அணி, 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 273 ரன்கள் சேர்த்தது. இந்திய தரப்பில் ஷிகா பாண்டே 3 விக்கெட்டுகளும், எக்தா பிஷ்ட், ஹர்மன்பிரீத் கவுர் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
அடுத்து 274 ரன்கள் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணிக்கு விக்கெட்டுகள் சரிந்த வண்ணம் இருந்தன. மந்தனா 4 ரன், பூனம் ரவுத் 22 ரன், கேப்டன் மித்தாலி ராஜ் 0 என நடைய கட்ட, தீப்தி ஷர்மா 60 ரன், கோஸ்வாமி 43 ரன் எடுத்து ஆறுதல் அளித்தனர். பின்னர், 46 ஓவர்களில் 158 ரன்களில் ஆல்-அவுட் ஆனது இந்திய அணி. இதன் மூலம் தென்னாப்பிரிக்கா 115 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 
இந்த உலகக் கோப்பைப் போட்டியில் தொடர்ச்சியாக 4 ஆட்டங்களில் வெற்றி கண்டிருந்த இந்தியாவுக்கு இது முதல் தோல்வி. இந்திய அணி அடுத்த லீக்கில் ஆஸ்திரேலியாவை 12-ம் தேதி எதிர்கொள்கிறது.