விளையாட்டு

கோலி வேகத்தில் தடுமாறி சரிந்த நடுவர்!

கோலி வேகத்தில் தடுமாறி சரிந்த நடுவர்!

webteam

விராத் கோலி அடித்த பந்து, நடுவரின் தலைக்கு நேராக வந்ததால் அவர் நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

இலங்கை அணியுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளை தொடர்ந்து டி20 போட்டியிலும் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. கொழும்புவில் நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது.
ரன்வேட்டை நடத்திய கேப்டன் விராத் கோலி 30 பந்துகளில் அரைசதம் அடித்தார். 54 பந்துகளில் 82 ரன்கள் குவித்து அவர் வெளியேறினார். 

முன்னதாக, 15.5-வது ஓவரில் மலிங்கா வீசிய பந்தை கோலி நேராகத் தூக்கினார். வேகமாக சீறி பாய்ந்த பந்து, எதிரில் நின்ற நடுவர் பல்லியகுருகேவின் நெற்றியை நோக்கி வர, பயத்தில் தடுமாறிய அவர் தலையில் கையை வைத்தபடி அப்படியே சரிந்துவிட்டார் கீழே. அவர் கவனிக்காமல் இருந்திருந்தால் கண்டிப்பாக அந்தப் பந்து அவர் மண்டையை பதம் பார்த்திருக்கும். இதை ஆச்சரியமாக பார்த்துக்கொண்டிருந்தனர் மலிங்காவும் மணீஷ் பாண்டேவும். ஆனால், கீழே விழுந்து எழுந்து பல்லியகுருகே, நினைத்து நினைத்து சிரித்தார். 

இதையடுத்து ’அம்பயருக்கும் ஹெல்மெட் வேணும்’ என்ற கோரிக்கையை சமூக வலைத்தளங்களில் வைத்துள்ளார் கிரிக்கெட் ஆர்வலர்கள்.