விளையாட்டு

திவேதியாவுக்கு அஸ்ஸாம் நடனம் கற்றுக் கொடுத்த ரியான் பராக் - வைரலான வீடியோ

EllusamyKarthik

ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் ரியான் பராக், சக வீரர் திவேதியாவுக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் வீடியோ இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. 

ராகுல் திவேதியா பல ஆண்டுகளாக ஐபிஎல்லில் விளையாடி வரும் போதிலும், நடப்பு சீசனில் பஞ்சாப்புக்கு எதிரான போட்டியில் ஒரே ஓவரில் 5 சிக்ஸர்களை விளாசியதன் மூலம் OVER NIGHT இல் இந்தியாவின் SENSATION ஆனார். ஆமை வேக ஆட்டம் எனக் கூறி அள்ளி வீசப்பட்ட விமர்சனங்களுக்கு அதே போட்டியில் சுடச்சுட பதிலளித்து , அணியின் ஆஸ்தான ஆல்ரவுண்டராகவும் உருவெடுத்தார்.

தொடர்ந்து கணிசமாக ரன்கள் சேர்த்து அணிக்கு பங்களித்து வந்த திவேதியா, ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியின் போதும் இக்கட்டான சூழலில் வெற்றியை தேடித் தரும் சுமை விழுந்தது. பட்லர், ஸ்டோக்ஸ், ஸ்மித், சாம்சன் என அணியின் தூண்கள் அனைத்தும் சரிந்த சூழல் அது. அழுத்தமிக்க அக்களத்தில் திவேதியாவுடன் இணைந்திருந்த ஜோடி, 18 வயதே ஆன இளங்கன்று ரியான் பரக். பொறுப்புடன் பொறுமையைக் கடைபிடித்த இருவரும் சீரான வேகத்தில் ரன்களைச் சேர்த்தனர்.

ஆட்டத்தின் 17 ஆவது ஓவரில் அமைதிப் போக்கை அகற்றி அதிரடியைக் கையில் எடுத்தது திவேதியா - பரக் ஜோடி. மாயாஜால சுழல் வீரர் ரஷீத் கான், யார்க்கர் மன்னன் நடராஜன் என கடினமான பவுலர்களையும் சாதூர்யாக கையாண்டு ஹாட்ரிக் பவுண்டரிகளாலும், சிக்ஸர்களாலும் இருவரும் அமர்க்களப்படுத்தினர். விடா முயற்சியுடன் களத்தில் நடத்திய போராட்டத்திற்கு பலனாக கடைசி வரை ஆட்டமிழக்காமல் அசத்தலான வெற்றியையும் அறுவடை செய்தனர்.

இருவரும் பெற்றுக் கொடுத்த வெற்றி, பசுமை இழந்து காணப்பட்ட ராஜஸ்தானின் PLAY OFF நம்பிக்கையை மீண்டும் துளிர்விடச் செய்துள்ளது. இதனிடையே, ஹைதராபாத் அணிக்கு எதிராக இக்கட்டான சூழலில் இந்த ஜோடி வெற்றியை வசமாக்கிய போது, பராக் மைதானத்திற்குள் ஆடிய அஸ்ஸாமின் பாரம்பரிய நடனம் பலராலும் ரசிக்கப்பட்டது. 

இதையடுத்து போட்டி முடிவடைந்த பின்னர் அவர் திவேதியாவுக்கும் அந்த நடனத்தைக் கற்றுக் கொடுத்தார்.