விளையாட்டு

டிவில்லியர்ஸ், மொயின் அலி விளாசல் - ஐதராபாத் அணிக்கு 219 ரன் இலக்கு

டிவில்லியர்ஸ், மொயின் அலி விளாசல் - ஐதராபாத் அணிக்கு 219 ரன் இலக்கு

rajakannan

டிவில்லியர்ஸ், மொயின் அலி அரைசதம் விளாச ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூர் 219 ரன்கள் இலக்காக நிர்ணயித்துள்ளது.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெறும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. பெங்களூர் அணியில் பார்த்தீவ் பட்டேல், விராட் கோலி தொடக்க வீரர்களாக களமிறங்கினர். பார்த்தீவ் பட்டேல் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். அவரை தொடர்ந்து கேப்டன் விராட் கோலி 12 ரன்னில் ரஷித் கான் பந்துவீச்சில் போல்டாகி வெளியேறினார். 38 ரன்களுக்கு பெங்களூர் அணி 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போது, ஏபி டிவில்லியர்ஸும், மொயின் அலியும் ஜோடி சேர்ந்தனர். இருவரும் ஐதராபாத் பந்து வீச்சை அடித்து நொறுக்கினர். 

மொயின் அலி 25 பந்துகளிலும், டிவில்லியர்ஸ் 32 பந்துகளிலும் அரைசதம் விளாசினர். சிறப்பாக விளையாடி ரன்களை குவித்த இந்த ஜோடி ரஷித் கான் பந்துவீச்சில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். டிவில்லியர்ஸ் 69(39), மொயின் அலி 65(34) ரன்கள் எடுத்தனர். மொயின் அலி 6 சிக்ஸர்கள் விளாசினார். இறுதியில், கிராண்ஹோம் 40(17) ரன்கள் எடுக்க பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் எடுத்தது. 

ஐதராபாத் தரப்பில் ரஷித் கான் 3, கவுல் 2 விக்கெட்டுகளை சாய்த்தனர். இதனையடுத்து, 219 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் ஐதராபாத் அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் தோல்வி அடைந்தால் பெங்களூர் அணி வெளியேறிவிடும். வெற்றி பெற்றால் பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை அந்த அணி தக்க வைக்கும்.