விளையாட்டு

‘தோல்வியா.. அப்படினா என்ன’- கேப்டன்சியில் கலக்கும் ரோகித்.. என்ன சாதனை செய்தார் தெரியுமா?

‘தோல்வியா.. அப்படினா என்ன’- கேப்டன்சியில் கலக்கும் ரோகித்.. என்ன சாதனை செய்தார் தெரியுமா?

webteam

இலங்கை அணியை வென்ற பிறகு இந்திய கேப்டனாக ரோகித் ஷர்மாவின் முறியடிக்கப்படாத சாதனையை முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டில் இந்தியா மற்றொரு உறுதியான வெற்றியைப் பதிவுசெய்து தொடரைக் கைப்பற்றிய பிறகு, பல முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் ரோகித் ஷர்மாவின் கேப்டன்சியைப் பாராட்டினர். முதல் டெஸ்ட்டில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி, இரண்டாவது போட்டியில் 238 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், ரோகித் ஷர்மா ஒரு கேப்டனாக டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் தலா ஐந்து வெற்றிகளுக்கு மேல் பெற்று சாதித்துள்ளார்.

முன்னாள் இந்திய டெஸ்ட் தொடக்க ஆட்டக்காரர் வாசிம் ஜாஃபர், ரோகித் ஷர்மாவின் கேப்டன்ஷிப்பை தனக்கே உரிய பாணியில் பாராட்டினார். அவர் டெஸ்டில் ரோகித்தின் சாதனையை விளக்குவதற்காக அல்லு அர்ஜுனின் புஷ்பா படத்திலிருந்து ஒரு புகைப்படத்தைப் பகிர்ந்து கொண்டார். ரோகித் ஷர்மா முழுநேர கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, அவர் ஒரு போட்டியில் கூட தோற்காமல் ஐந்து டெஸ்ட் தொடர் வெற்றிகளைப் பதிவு செய்துள்ளார்.

ரோகித் ஷர்மா தலைமையின் கீழ், இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது. அதற்கு முன்பு வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் 3-0, 3-0 என்ற கணக்கில் வெற்றிகளைப் பதிவு செய்தது இந்திய அணி.

கேப்டனாக ரோகித்தின் சமீபத்திய வெற்றிகள் இலங்கைக்கு எதிராகவும் தொடர்ந்துள்ளன. இலங்கைக்கு எதிராக அவர் T20 மற்றும் டெஸ்ட் தொடர்களில் முறையே 3-0 மற்றும் 2-0 வெற்றிகளுடன் அணியை அற்புதமாக வழிநடத்தியுள்ளார். கேப்டனாக ரோகித்தின் தொடர் வெற்றிகளுக்கு சச்சின் உள்ளிட்ட முன்னாள் வீரர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.