இந்தாண்டு தொடக்கத்தில் இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் போட்டியில் விளையாடியது. அப்போது நடந்த ஒரு சுவாரஸ்யமான சம்பவத்தை இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ரோஹித் ஷர்மா தெரிவித்துள்ளார்.
தென்னாப்பிரிக்காவில் ஜடேஜா, ரஹானே, ரோஹித் ஆகியோர் அங்குள்ள காட்டில் சவாரி மேற்கொண்டுள்ளார். இவர்களுடன் ரஹானே, ரோஹித் ஆகியோரின் மனைவிகள் உடன் சென்றுள்ளார். காட்டின் நடுவே சென்றபோது இரு சிறுத்தைகளை இவர்கள் கண்டுள்ளனர். சிறுத்தை தனது இரையை தூக்கிக்கொண்டு சென்றுள்ளது. இவர்கள் அனைவரும் ஒருவித பதற்றத்துடன் இந்தக்காட்சியை பார்த்துள்ளனர். ஆனால் ஜடேஜா மட்டும் விளையாட்டு தனமாக இருந்துள்ளார்.
அந்த நேரத்தில் ஒரு விதமாக சப்தம் எழுப்பி சிறுத்தைகளின் கவனத்தை ஈர்க்க முயற்சித்துள்ளார். அவர் நினைத்தது போலவே சிறுத்தை அவர்களை பார்த்துள்ளது. அப்போது ஜடேஜாவின் முகத்தில் குத்தவேண்டும் என்று தோன்றியதாக ரோஹித் சமீபத்திய பேட்டியில் தெரிவித்துள்ளார். பின்னர் தான் அமைதியாகி ஜடேஜாவை முறைத்து பார்த்ததாகவும், அதன்பின் அவர் அமைதியாகிவிட்டதாக கூறினார். இனி நான் ஜடேஜாவுடன் செல்வதில்லை என முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார்.