ஐபிஎல் தொடரில் நடத்தை விதிமுறைகளை மீறிய மும்பை அணிக் கேப்டன் ரோகித் ஷர்மாவுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா அணியுடனான போட்டியின் போது நடுவர் எல்.பி.டபிள்யு முறையில் அவருக்கு அவுட் வழங்கினார். ஆனால் பந்து பேட்டில் பட்டுச் சென்றதால் ஆத்திரமடைந்த ரோகித் ஷர்மா மைதானத்தில் நின்று நடுவரின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தார். போட்டிக்கு பின்னர் அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தம்மீதான தவறை ரோகித் ஷர்மா ஒப்புக்கொண்டார்.