விளையாட்டு

பேருந்தை பதம்பார்த்த ரோஹித் ஷர்மா அடித்த சிக்ஸ்..!

பேருந்தை பதம்பார்த்த ரோஹித் ஷர்மா அடித்த சிக்ஸ்..!

EllusamyKarthik

அடுத்த சில நாட்களில் துபாயில் ஆரம்பமாக உள்ள ஐ.பி.எல் தொடருக்கு தயாராகும் வகையில் அனைத்து அணி வீரர்களும் துபாயில் முகாமிட்டு தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். சர்வதேச கிரிக்கெட்டில் ஹிட்மேன் என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படும் ரோஹித் ஷர்மா பந்துகளை காட்டுத்தனமாக அடித்து விளையாடுவதில் வல்லவர். கிரிக்கெட் புக்கில் உள்ள அத்தனை ஷாட்டுகளும் இவருக்கு பேட் வந்த கலை. 

அண்மையில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் மேற்கொண்ட வலைப்பயிற்சியில் பந்துகளை பவுண்டரிக்கு பறக்க விடும் அசுர ஆட்டத்தை, ட்விட்டரில் நேற்று பகிர்ந்திருந்தது மும்பை இந்தியன்ஸ் அணி. 

இந்நிலையில் அதே பயிற்சியில் ரோஹித் ஷர்மா சுழற்பந்து வீச்சாளர் ஒருவரின் பந்தை  95 மீட்டர் தூரத்திற்கு சிக்ஸ் அடித்து பறக்கவிட்டுள்ளார். அந்த சிக்ஸர் மைதானத்தை கடந்து சாலையில் சென்று கொண்டிருந்த பேருந்தின் மேற்கூரையில்பட்டது. அந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி வருகிறது. 

‘அந்த பஸ்ஸின் கண்ணாடி உடைந்ததா? இல்லையா?’ என அந்த வீடியோவை படம் பிடித்தவர் கேட்பதும்  அதில் பதிவாகியுள்ளது.