இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் ‘ரோஹித் ஷர்மாவிடம் சிறந்த தலைமைப்பண்பு உள்ளது’ என தெரிவித்துள்ளார்.
ஐ.பி.எல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணியை கடந்த 2013 முதலே கேப்டனாக வழிநடத்தி வருகிறார் ரோஹித் ஷர்மா. அவரது தலைமையில் மும்பை அணிக்காக ஜாகீர் கான் விளையாடியுள்ள சூழலில் இதை தெரிவித்துள்ளார்.
ட்விட்டரில் #AskZakOnMI என்ற டேக்கில் ‘கேப்டன் ரோஹித்திடம் நீங்கள் பார்த்த சிறந்த தரம் என்ன?’ என்ற கேள்விக்கு ஜாகிர் கான் தனது பதிலை தெரிவித்துள்ளார்.
‘ரோஹித் ஷர்மா இக்கட்டான சூழ்நிலையிலும் நிதானமாக இருப்பார். ஆனால் அந்த போட்டி குறித்து தீவிரமாக சிந்திப்பார். அணியில் சிறந்த பதினோரு வீரர்களை தேர்வு செய்வதில் ஆரம்பித்து, அந்த வீரர்களின் பெஸ்டை எப்படி வாங்குவது என்பதையும் நன்றாக தெரிந்து வைத்திருப்பார். அவரிடம் ஒரு கிரிக்கெட் அணியை திறம்பட வழிநடத்தி சிறந்த தலைமைப்பண்பு உள்ளது’ என தெரிவித்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணிக்காக நான்கு முறை கோப்பையை வென்று கொடுத்துள்ளார் ரோஹித்.
இதையும் படிக்க : http://www.puthiyathalaimurai.com/newsview/78742/I-acted-like-I-did-nOt-understand-what-Dhoni-said-in-Hindi-SAYS-Panesar