விளையாட்டு

கங்குலி, கோலியை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மா புதிய சாதனை

கங்குலி, கோலியை பின்னுக்கு தள்ளி ரோகித் சர்மா புதிய சாதனை

rajakannan

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 5-வது ஒருநாள் போட்டியில் சதம் விளாசிய ரோகித் சர்மா கங்குலி, கோலியின் சாதனையை முறியடித்துள்ளார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 5-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி நாக்பூர் மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 109 பந்துகளில் 125 ரன்கள் எடுத்தார். இந்த நிலையில், ரோகித் சர்மா பல்வேறு மைல்கல்லை எட்டியுள்ளார்.

இந்திய அணியில் அதிவேகமான 2000 ஆயிரம் ரன்களை கடந்த வீரர் என்ற சாதனையை ரோகித் படைத்துள்ளார். மொத்தம் 42 இன்னிங்சில் விளையாடி அவர் இந்த சாதனையை படைத்துள்ளார். அவருக்கு அடுத்த நிலையில் கங்குலி 45, கோலி 46 இன்னிங்ஸில் 2000 ரன்களை கடந்து இருந்தனர். அதேபோல், இந்தப் போட்டியில் 92 ரன்கள் எடுத்திருந்த போது 6000 ரன்களை ரோகித் கடந்தார்.

இந்த போட்டியின் மூலம் ரோகித் சர்மாவின் சில மைல்கல்கள்:-

  • இந்திய அளவில் அதிவேகமாக 2000 ரன்கள் எடுத்தவர்
  • ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2013, 2015, 2017 தொடர்களில் அதிக ரன்கள் எடுத்தவர்
  • தொடக்க வீரராக வேகமாக 4 ஆயிரம் ரன்கள் எடுத்த இரண்டாவது வீரர்
  • வேகமாக 6 ஆயிரம் ரன்கள் எடுத்த மூன்றாவது இந்திய வீரர்
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மாவின் 6-வது சதம்
  • சிக்ஸர் விளாசி இன்று சதம் அடித்தார்
  • இந்த தொடரில் அதிக ரன்கள்(296) எடுத்து முதலிடத்தில் உள்ளார்
  • இந்த ஆண்டில் அதிக சிக்ஸர்கள் அடித்தவர். மொத்தம் 29 சிக்ஸர்கள். அவருக்கு அடுத்து பாண்ட்யா 28 சிக்ஸர்கள் அடித்துள்ளார்.