விளையாட்டு

குல்தீப், சேஹல் சுழலில் அயர்லாந்து, ஐயையோ!

webteam

அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடுகிறது. அதற்கு முன்பாக அயர்லாந்து அணியுடன் இரண்டு டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதல் டி20 போட்டி டப்ளினில் நேற்று இரவு நடந்தது. அயர்லாந்து அணி டாஸ் வென்று பந்து வீச்சைத் தேர்வு செய்தது.

அதன்படி, இந்திய அணியின் ரோகித் சர்மாவும் ஷிகர் தவானும் களமிறங்கினர். இருவரும் அதிரடியாக விளையாடினர். இருவரும் தங்களது அரைசதத்தைப் பூர்த்தி செய்தனர். இந்திய அணி 160 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சிறப்பாக மிரட்டிய ஷிகர் தவான் 74 ரன்களில் கேட்ச் ஆனார். அவர் 45 பந்துகளில் 5 சிக்சர், 5 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார்.  

விளாசுவார் எதிர்பார்க்கப்பட்ட சுரேஷ் ரெய்னா 10) ரன்க ளில் வெளியேறினார். அடுத்த வந்த தோனி 11 ரன்களில் அவுட் ஆனார். செஞ்சுரி அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட ரோகித் சர்மா, 97 ரன்னில் அவுட் ஆனார். அவர் 61 பந்துகளில் 5 சிக்சர், 8 பவுண்டரிகளுடன் இந்த ரன்னை எடுத்தார். அடுத்து வந்த விராத் கோலி டக் அவுட் ஆக, கடைசி பந்தில் சிக்சர் அடித்தார் ஹர்திக் பாண்ட்யா. இதையடுத்து இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 5 விக்கெட்டுகளை இழந்து 208 ரன்கள் எடுத்தது. 

அயர்லாந்து அணி சார்பில் பீட்டர் சேஸ் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். கடைசி ஓவரில் மட்டும் அவர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.

209 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி விளையாடிய அயர்லாந்து அணிக்கு இந்திய அணியின் சுழல்பந்துவீச்சாளர்கள் குல்தீப் யாதவ்வும், சேஹலும் கடும் நெருக்கடி கொடுத்தனர்.  தொடக்க ஆட்டக்காரர் ஷனோன் 35 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். மற்றவர்கள் யாரும் நிலைத்து நிற்காததால் அந்த அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு 132 ரன்களை மட்டுமே எடுக்க முடிந் தது. இதன் மூலம் 76 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றிபெற்றது. 

இந்திய தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டும், சேஹல் 3 விக்கெட்டும், பும்ரா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.  ஆட்டநாயகன் விருது குல்தீப் யாதவுக்கு வழங்கப்பட்டது.