விளையாட்டு

‘பெற்றோரை பார்த்து மூன்று மாதங்களாகி விட்டது’ -  மனம்திறந்த ரோஜர் பெடரர்

JustinDurai
முன்னணி டென்னிஸ் வீரர் ரோஜர் பெடரர் ‘லாக்டவுன்’ கால தனது வாழ்க்கையைப் பற்றி மனம் திறந்துள்ளார்.
டென்னிஸ் போட்டிகளில் 20 முறை கிராண்ஸ்லாம் பட்டம் வென்ற  ரோஜர் பெடரர் 39 வயதை நெருங்குகிறார். கடந்த மாதம் தனது ஓய்வு குறித்த ஊகங்களுக்கு மத்தியில் முழங்கால் அறுவை சிகிச்சை காரணமாக தனது 2020 சீசனின் எஞ்சிய போட்டிகளை நிறுத்தினார்.
கொரோனா பொதுமுடக்கத்தால் தனது குடும்பத்தினருடன் சுவிட்சர்லாந்தில் வசித்து வந்த ரோஜர் பெடரர், சமீபத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி மனம்திறந்தார். மேலும் அவர் மூன்று மாதங்களாக தனது பெற்றோரை சந்திக்கவில்லை என்று கூறினார்.
நான் 25 ஆண்டுகளில் இப்படி வீட்டில் நீண்ட காலம் குடியிருந்ததில்லை. நாங்கள் மலைகளில் இருப்பதால் யாரையும் சந்திக்காததால் பாதுகாப்பாக இருக்கிறோம், ”என்று பேட்டி ஒன்றில் கூறினார்.
“நான் விதிமுறைகள் குறித்து மிகவும் கண்டிப்பாகவும் தீவிரமாகவும் இருந்தேன். நான் இப்போது மூன்று மாதங்களில் என் பெற்றோரைப் பார்க்கவில்லை. இந்த ஓய்வை, குழந்தைகளுடன் முழுவதுமாக செலவிட்டுக் கொண்டிருக்கிறேன்.
ஆனால் இந்த விசித்திரமான காலம் குடும்பத்தினருடன் நேரம் செலவிடுவதற்கு ஒரு வாய்ப்பை அளித்துள்ளது என்று நான் நினைக்கிறேன்’’ என்று ரோஜர் பெடரர் தெரிவித்துள்ளார். 
 
ஸ்விட்சர்லாந்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் சிகிச்சைக்காக சமீபத்தில் ரோஜர் பெடரர் ரூ.8 கோடி நிதி வழங்கியது குறிப்பிடத்தக்கது.