விளையாட்டு

ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் ரோஜர் ஃபெடரர்

ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் ரோஜர் ஃபெடரர்

webteam

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸில் சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளார்.

சர்வதேச தரநிலையில் 17-வது இடத்தில் உள்ள ஃபெடரர் அரையிறுதியில், சக நாட்டைச் சேர்ந்த நான்காம் நிலை வீரரான வாவ்ரிங்கா-வை எதிர்த்து விளையாடினார். 5 செட்கள் நீடித்தத போட்டியில் 7-5,6-3, 1-6, 4-6, 6-3 என்‌ற கணக்கில் ஃபெடரர் வெற்றியை வசப்படுத்தினார். மூன்று மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த போட்டியில் வென்றதன் மூலம் கடந்த 43 ஆண்டுகளில் கிராண்ட்ஸ்லாம் தொடர் ஒன்றின் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற வீரர் என்ற பெருமையை 35 வயதான ஃபெடரர் பெற்றார்.