ஏடிபி உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
ஏடிபி உலக சாம்பியன்ஷிப் டென்னிஸ் போட்டியில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் தனது இரண்டாவது போட்டியில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வரேவ் உடன் பலப்பரீட்சை நடத்தினார். முதல் செட்டை 7-6 எனக் கைப்பற்றிய ஃபெடரர், அடுத்த செட்டை 5-7 என இழந்தார். வெற்றியை தீர்மானிக்கும் கடைசி செட்டை ரோஜர் ஃபெடரர் 6-1 என எளிதில் கைப்பற்றி, அரையிறுதியை உறுதி செய்தார். உலகத் தரவரிசையில் முதல் 8 இடங்களில் உள்ள வீரர்கள் பங்கேற்கும் ஏடிபி பைனல்ஸ் டென்னிஸ் போட்டியில் 14-வது முறையாக ஃபெடரர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
மற்றொரு போட்டியில் அமெரிக்க வீரர் ஜாக் சாக் தனது முதல் வெற்றியைப் பதிவு செய்தார். முதல் போட்டியில் ஃபெடரரிடம் தோல்வி கண்டிருந்த ஜாக் சாக், தனது இரண்டாவது ஆட்டத்தில் குரோஷியாவின் மரின் சிலிச் உடன் பலப்பரீட்சை நடத்தினார். விறுவிறுப்பு நிறைந்த போட்டியில் 7-5, 6-2, 7-6 என்ற செட் கணக்கில் ஜாக் சாக் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை தக்கவைத்தார்.