விம்பிள்டன் டென்னிஸ் போட்டியில் பட்டம் வென்றது மாயாஜாலம் என சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் ஃபெடரர் கருத்து தெரிவித்துள்ளார்.
4 ஆண்டுகளாக பட்டம் வெல்லாதபோதிலும், சாதிக்க முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருந்ததாக 35 வயதான ஃபெடரர் கூறினார். அதனால் தான், விம்பிள்டனில் எட்டாவது முறையாக கோப்பையை வெல்ல முடிந்தது என அவர் தெரிவித்தார். இறுதி ஆட்டத்தில் குரோஷியாவின் மரின் சிலிச்சை நேற்று வீழ்த்திய ரோஜர் ஃபெடரர், அதிக வயதில் விம்பிள்டன் பட்டம் வென்றவர் என்ற சாதனையை படைத்தார்.