இளம் வீரர் ரிஷப் பண்ட் ஒருபோதும் அடுத்த தோனியாக முடியாது என தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தொடக்க ஆட்டக்காரர் கவுதம் கம்பீர்.
இந்திய கிரிக்கெட் அணியில் தோனி விட்டுச் சென்றுள்ள வெற்றிடத்தை நிரப்பும் வல்லமை படைத்த மாற்று வீரராக பார்க்கப்படுகிறார் இளம் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பண்ட்.
அது தோனி இந்தியாவுக்காக விளையாடி வந்த போதே சொல்லப்பட்டது.
இந்திய கிரிக்கெட் அணியில் அவரும் அப்படித்தான் பார்க்கப்பட்டார்.
இருப்பினும் மோசமான ஃபார்மின் காரணமாக பண்ட் அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார்.
இந்நிலையில் பண்டை தோனியுடன் ஒப்பிடுவது குறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார் கம்பீர்.
“முதலில் பண்டை தோனியோடு ஒப்பிட்டு பேசுவதை நிறுத்த வேண்டும். பண்ட் ஒருபோதும் அடுத்த தோனியாக முடியாது. பண்ட் அவரது இயல்பான ஆட்டத்தை விளையாட வேண்டும். பேட்டிங், விக்கெட் கீப்பிங் என அவர் நிறைய பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும்’’ என தெரிவித்துள்ளார்
நடப்பு ஐபிஎல் சீசனில் 12 ஆட்டங்களில் பண்ட் 285 ரன்களை எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.