விளையாட்டு

ஐபிஎல் 2020 : பயிற்சியில் சுழற்பந்துகளை சிக்ஸர்களாக பறக்கவிடும் பண்ட்..!

ஐபிஎல் 2020 : பயிற்சியில் சுழற்பந்துகளை சிக்ஸர்களாக பறக்கவிடும் பண்ட்..!

webteam

டெல்லி அணியின் விக்கெட் கீப்பர் ரிஷாப் பண்ட் பயிற்சியின் போது சுழற்பந்துகளில் உயரமான சிக்ஸர்களை அடித்து அசத்தியுள்ளார்.

செப்டம்பர் 19ஆம் தேதி யுஏஇ-ல் (ஐக்கிய அரபு அமீரகம்) தொடங்கவுள்ள ஐபிஎல் போட்டிக்காக அனைத்து அணி வீரர்களும் தீவிரப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் டெல்லி கேபிடல்ஸ் அணியும் தீவிர பயிற்சி செய்து வருகிறது. டெல்லி கேபிடல்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் இளம் வீரர் ரிஷாப் பண்ட்டின் பேட்டிங் பயிற்சி வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் சுழற்பந்துகளை எதிர்கொள்ளும் ரிஷாப் பண்ட் உயமரான சிக்ஸர்களை அடிக்கிறார். வெவ்வேறு கோணங்களில் பந்துகளை பறக்கவிடும் பண்ட், கடைசியாக சிக்ஸர் அடித்த பின்னர் கைகளை தூக்கி உற்சாகத்தை வெளிப்படுத்துகிறார். இந்திய அணியில் முக்கிய வாய்ப்பளிக்கப்பட்ட ரிஷாப், தனது ஆட்டத்தின் திறமையை சரியாக வெளிப்படுத்தமால் அந்த இடத்தை தவறவிட்டார்.

இதனால் கே.எல்.ராகுல் இந்திய அணியில் அசைக்கமுடியாத இடத்தை பிடித்துவிட்டார். இருப்பினும் அவர் முன்னணி பேட்ஸ்மேனாக இருப்பதால், விக்கெட் கீப்பர் என்ற அடிப்படையில் மீண்டும் பண்ட்க்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

இந்நிலையில் வரும் ஐபிஎல் போட்டியில் தனது பேட்டிங் மற்றும் கீப்பிங் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி, அதன்மூலம் இந்திய அணியில் மீண்டும் பண்ட் வாய்ப்பை பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அத்துடன் இடது பேட்டிங் பழக்கம் கொண்ட பண்ட் முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலியின் பேட்டிங் ஸ்டைலை கடைபிடிக்க முயல்கிறார் எனவும் சிலர் தெரிவித்துள்ளனர். சுழற்பந்துகளில் யாரும் அடிக்க முடியாத உயரத்தில் சிக்ஸர் அடிப்பதில் கங்குலி வல்லவர் என்பது குறிப்பிடத்தக்கது.