விளையாட்டு

ஐசிசி தரவரிசை: 7-ஆம் இடத்திற்கு முன்னேறிய ரிஷப் பன்ட்!

ஐசிசி தரவரிசை: 7-ஆம் இடத்திற்கு முன்னேறிய ரிஷப் பன்ட்!

jagadeesh

ஐசிசியின் 20 ஓவர்கள் கிரிக்கெட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்தியா 2-ஆம் இடத்தை பிடித்துள்ளது.

மேலும் இந்தியா, டெஸ்ட் தரவரிசையில் முதல் இடத்திலும், ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளுக்கான தரவரிசையில் 2 ஆம் இடத்திலும் உள்ளது. நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரை இழந்ததன் மூலம் ஆஸ்திரேலிய அணி 3-ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இங்கிலாந்து அணி இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது.

பேட்ஸ்மேன்களுக்கான தரவரிசை பட்டியலில் இங்கிலாந்தின் டேவிட் மலான் முதல் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஆரோன் பிஞ்ச் 2 ஆம் இடத்திலும், இந்தியாவின் கேஎல் ராகுல் 3 ஆம் இடத்திலும் உள்ளனர். ஐசிசியின் டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசையில் பேட்ஸ்மேன்கள் பிரிவில் இந்தியாவின் விக்கெட் கீப்பா் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட் முதல் முறையாக 7-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்டில் சதம் விளாசியதன் பலனாக 7 இடங்கள் முன்னேறி தற்போதைய இடத்தைப் பிடித்துள்ளாா் பன்ட். அந்த இடத்தை அவா் சக இந்தியரான ரோஹித் சா்மா, நியூஸிலாந்தின் ஹென்றி நிகோலஸ் ஆகியோருடன் பகிர்ந்துள்ளார்.