விளையாட்டு

ஆர்சிபி அணியில் அதிரடி மாற்றம்: கேரி கிறிஸ்டன், நெஹ்ரா நீக்கம்

ஆர்சிபி அணியில் அதிரடி மாற்றம்: கேரி கிறிஸ்டன், நெஹ்ரா நீக்கம்

webteam

ஐபிஎல் தொடரில் விளையாடும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின்  பயிறிசியாளர்கள் கேரி கிறிஸ்டன், ஆசிஷ் நெஹ்ரா நீக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தற்போதைய ‌பயிற்சி யாளர்‌ கேரி கிறிஸ்டன் மற்றும் பந்துவீச்சு பயிற்சியாளர் ஆசிஷ் நெக்ரா ஆகியோர் நீக்கப்படுவதாக அறிவித்துள்ளது.

நியூசிலாந்து முன்னாள் வீரரும், இந்திய பயிற்சியாளர் பணிக்கு விண்ணப்பித்தவர்களில் ஒருவருமான மைக் ஹீசன், பெங்களூரு அணியின் இயக்குநராக பணியாற்றுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலு‌ம் ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் சைமன் கேடிச், அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்‌.