விளையாட்டு

‘பெங்களூருவின் பந்து வீச்சு பலமாக இல்லை’ - மைக்கேல் வாகன் 

‘பெங்களூருவின் பந்து வீச்சு பலமாக இல்லை’ - மைக்கேல் வாகன் 

EllusamyKarthik

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் பந்து வீச்சு இந்த சீஸனில் பலம் வாய்ந்ததாக இல்லை என தெரிவித்துள்ளார். 

கிரிக்பஸ் இணையப்பக்கம் உடனான கலந்துரையாடலில் இதனை அவர் தெரிவித்துள்ளார். 

டெல்லி உடனான லீக் ஆட்டத்தில் பெங்களூரு தோல்வியை தழுவியது குறிப்பிடத்தக்கது. 

“பேட்டிங் யூனிட்டில் செம ஸ்ட்ராங்காக உள்ள ஆர்.சி.பி பவுலிங்கில் மொத்தமாக கோட்டை விடுவதாக என தோன்றுகிறது. கடந்த இரண்டு சீஸன்களாகவே இந்த சிக்கலை ஆர்.சி.பி சந்தித்து வருகிறது. 

கோலி, டிவில்லியர்ஸ் என  உலகத்தரம் வாய்ந்த மேட்ச் வின்னர்கள் இடம்பெற்றுள்ள பெங்களூரு அணியில் கொஞ்சம் சங்கடம் கொடுக்கிறது.  அதை பேலன்ஸ் செய்து விட்டால் சாம்பியன் அணிக்கான தகுதியை பெற்று விடும்” என அவர் தெரிவித்துள்ளார்.